நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் புதிய அரசாங்கம் அமையவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என ஜேர்மனிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் மிகவும் அமைதியானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது என்றும், தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, இலங்கைத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment