தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன் - சிறீகாந்தா ஆதவாளர்களை இலக்கு வைத்து கும்பலொன்று தாக்குதல்களினை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில நேற்றிரவு
வடமராட்சி உடுப்பிட்டி பண்டகை பகுதியில் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோகன் என்றழைக்கப்படும் குறித்த நபர் விந்தன் கனகரட்ணத்தின் ஆதரவாளர் என தெரியவருகின்றது.
தனது பகுதியில் வேறு அரசியல் தரப்புக்களினை சேர்ந்தவர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க இவர் அனுமதித்திருக்காது கட்டைபஞ்சாயத்து செய்து வந்திருந்ததாகவும் இந்நிலையில் நேற்றிரவு முகங்களை மூடிக்கட்டியவாறு வந்த பத்திற்கும் அதிகமானவர்களை கொண்ட இளைஞர் கும்பலொன்று வீட்டின் மீது தாக்குதலினை நடத்தியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சிறுகுழந்தைகள் வீரிட்டு அழுததுடன் மனைவி மற்றும் பிள்ளைகள் இனிமேல் சுமந்திரன் சிறீகாந்தா ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லையென்ற உறுதி மொழியை அடுத்து தாக்குதலாளிகள் வெளியேறி சென்றுள்ளனர்.
கூட்டமைப்பின் சுமந்திரன் மீதான மக்களது வெறுப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளதையடுத்து அவர்களது எடுபிடிகளினை இலக்கு வைத்து தாக்குதல்களினை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் கூட்டமைப்பினுள் நிலவும் உட்கட்சி மோதலே தாக்குதலிற்கு காரணமென இன்னொரு தரப்பு கூறுகின்றது.

No comments:
Post a Comment