August 3, 2015

இலங்கையில் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை பொருத்திய இந்திய குடும்பம் கைது!

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை பொருத்தும் சிகிச்சையில் சம்பந்தப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை

 இந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசா பர்ஹம்பூர் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு 22
வயதான இளைஞர் தனது சிறுநீரகத்தை மூன்று லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
சிறுநீரகத்தை வழங்கிய இளைஞனை தமது உறவினர் என காட்டுவதற்காக போலி ஆவணங்களை தயார் செய்திருந்த, சந்தேக நபர்கள் அவற்றை
பயன்படுத்தி கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுள்ளனர்.
சிறுநீரகத்தை இந்தியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மூலம் பொருத்திக்கொள்ள சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர். அது தோல்வியடைந்ததை
அடுத்து, இலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்றை அவர்கள் தெரிவு செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை மற்றும் மலைத்தீவு நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத சிறுநீராக மாற்று சத்திர சிகிச்சைகள் நடைபெறுவதாக ஏற்கனவே
தகவல்கள் வெளியாகி இருந்தன.
கொழும்பு, சென்னை, மாலே போன்ற நகரங்களை மையப்படுத்தி, சில குழுவினர் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தொடர்பான குற்றச் செயல்களில்
 ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள சில வைத்தியசாலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சில மருத்துவர்கள் உட்பட பல இடைத்தரகர்கள் இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது.
வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் ஏமாற்றி பணத்தை கொடுத்து சிறுநீரகங்கள் பெறப்படுவதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment