August 7, 2015

சுமந்திரனிற்கு கலம் மக்ரே உடன் பதில்! முகமூடி கிழிந்தது!

சுமந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்பில் 4 சனல் செய்தி தொடர்பாக கூறிய கருத்துக்களிற்கு கலம் மக்ரே பதில் அளித்திருக்கிறார்.யாழ்.ஊடக அமையத்தினில் சுமந்திரன் நேற்று சொன்னவை தொடர்பினில் சிவில் சமூக செயற்பாட்டளர் குருபரன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
"எமது செய்தியில் என்ன புனைவு இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. எமது செய்தி 100 சதவீதமும் உண்மை. கசிய விடப்பட்ட ஆவணம் ஜெனீவா விசாரணை பற்றி குறிப்பிடவில்லை அதை ஒதுக்குகின்றது என்பதே இங்கு பிரச்சனை. அதே வேளை இந்த விசாரணையை நடாத்தும் ஜெனீவா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தான் இந்த உள்ளக விசாரணையை வழிநடத்தும் என்று கூறுகின்றது. அது தான் இங்கு கரிசனை கொள்ள வேண்டிய விடயம். ஜெனீவாவை புறம் தள்ளி நியூ யார்க் மற்றும் கொழும்பு அலுவலகங்கள் செயற்படுகின்றனவா என்ற கேள்வியை நாம் எழுப்புகின்றோமென கலம் மக்ரே பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் நேற்றைய ஊடக அமைய பத்திரிகையாளர் சந்திப்பினில் சுமந்திரன் சொன்ன மற்றொரு பொய்யும் அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment