August 23, 2015

புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­ததைப் போன்று தமிழ் மக்­களை ஏமாற்­றக்­கூ­டாது!

புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய ­ளித்­ததைப் போன்று தமிழ் மக்­க ளின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சினைக்குத் தீர்வை துரி­த­மா­க­ முன்­வைக்க வேண்டும். வெறு­மனே காலத்தைக் கடத்தி தமிழ் மக்­களை ஏமாற்­றக்­கூ­டாது. அதே போன்று
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த வாய் ப்பை சரி­யாகப் பயன்­ப­டுத்தி, தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்வைக் காண வேண்டும் இத்­த­ரு­ணத்தை கூட்­ட­மைப்பு தவ­ற ­வி­டு­மானால்  எதிர்­கா­லத்தில் மற்­று­ மொரு ஆணையை மக்­க­ளிடம் கோர­மு­டி­யாது போகும்..
இவ்­வாறு ஆயர் அமைப்­புக்கள், சிவில் அமைப்­புக்கள், புத்திஜீவிகள், புலம்­பெயர் அமைப்­புக்கள் பர­வ­லா கத் தமது கருத்­துக்­களை முன்வைத் ­துள்­ளன.நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்­டமைப்பு வட­கி­ழக்கில் வெற்றிவா கை­சூடி நாட்டில் மூன்­றாவதுபெரும்பான்மை அணியாக விளங்­கு­வது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையிலேயே மேற்­கண்­டவாறுதெரி­வித்­துள்­ளன.
திரு­கோண மலை மாவட்ட தமிழர்அபி­வி­ருத்திஒன்­றியதலை­வரும் மாவட்ட ஆய­ரு­மான நோயல் இம்­மா­னுவெல் கருத்துத் தெரி­விக்­கையில், இன்று இரு­பி­ர­தா­ன­கட்­சி­களும் ஒன்று கூடிய முறையில் புரிந்­து­ணர்வு  அடிப்­ப­டையில் நாட்டில் அமை­தி­யையும், சமா­தா­னத்­தையும் கொண்­டு­வர வேண்­டு­மென்ற இலக்­குடன்       செயற்­ப­ட­வுள்ள சூழ்­நி­லையில் இந்த நல்ல சந்­தர்ப்­பத்தை கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்தி நிரந்­த­ர­மான அர­சியல்        தீர்­வொன்றைக் காண முயல வேண்டும்.
அர­சியல் தீர்­வுக்கு அப்பால் வேலை வாய்ப்பு, கல்வி, பொரு­ளா­தார மேம்­பாடு மற்றும் யுத்­த­கா­லத்தில் கடத்­த­பட்­ட­வர்கள், போரினால் வித­வை­யாக்­கப்­பட்­ட­வர்கள், மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்கள், விடு­விக்­கப்­ப­டாது சிறையில் வாடும் இளை­ஞர்கள் சார்­பா­கவும் கூடிய கவனம் செலுத்­து­வ­துடன் காணி, மீள்­கு­டி­யேற்றம் சார்­பா­க­வும்­உ­ரிய நட­வ­டிக்­கை­களை கால தாமதம் செய்­யாமல் மேற்­கொள்­ள­வேண்டும் என்றார்.
மட்­டு­நகர் மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா கருத்துக் கூறு­கையில் ,தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக வட­கி­ழக்கில் த.தே.கூ. அமைப்பு உறுப்­பி­னர்கள் இனி­யா­வது அர­சியல் தீர்­வுக்­கான முடி­வைக்­காண துணிய வேண்டும். யாரு­டனும் சேர­மாட்டோம் எவ­ரு­டனும் கைகோர்க்­க­மாட்­டோ­மென்ற வரட்டு வாதத்தை கைவிட்டு இணைந்து பெற முயற்­சிக்க வேண்டும்.
இம்­முறை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் த.தே.கூ. அமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். திரு­கோ­ண­ம­லையைப் பொறுத்­த­வரை படிப்­ப­டி­யாக இழந்து போகும் அவ­ல­நி­லையே காணப்­ப­டு­கி­றது. இதே நிலை தான் அம்­பாறை மாவட்­டத்­திலும் நில­வு­கின்­றது.மக்கள் அதி­கூ­டிய அளவு வாக்­க­ளித்­தி­ருப்­பார்­க­ளானால் இந்­நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. மட்டு. மாவட்­டத்தில் 40 வீத மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. காலத்தை நீடிக்­காமல் விரைவில் ஒரு தீர்­வைப்­பெற்று அமை­தி­யுடன் கூடிய அதி­கார வலு­வ­டைய அபி­வி­ருத்தி ஒட்­டிய தீர்வைப் பெற வேண்டும். இல்­லை­யாயின் மக்­களின் சினத்­துக்கும் அவ­நம்­பிக்­கைக்கும் ஆளாக வேண்­டிய நிலை உரு­வாகும் என்­பதை த.தே.கூ. உணர வேண்டும் என்றார்.
கொழும்பு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் அ.சர்­வேஸ்­வரன் தனது கருத்தை தெரி­விக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மக்கள் அளித்­தி­ருக்கும் ஆணை­யென்­பது அவர்கள் கூட்­ட­மைப்பில் அதிக நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை காட்­டு­கின்­றது. இவ்­வா­றான சூழ்­நி­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது திட்­டத்தை இரு­வி­த­மா­கவோ அல்­லது மூன்­று­வி­த­மா­கவோ வகுக்­க­வேண்டும்.
குறு­கிய கால திட்டம், மற்­றை­யது நீண்ட காலத்­திட்டம்குறு­கிய காலத்­திட்டம் என்­கின்ற போது தமிழ் மக்­க­ளுக்குப் பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. கடந்த ஆட்சி காலத்தில் இதற்கு எந்த வித­மான தீர்வும், சகா­யமும் கிடைக்­க­வில்லை.முக்­கி­ய­மாக காணி பிரச்­சினை, விசா­ர­ணை­யின்றி சிறையில் வாழும் இளை­ஞர்­களின் விடு­தலை, காணமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை நிலை, அதே போல் மக்­களின் மீள் குடி­யேற்றம் இது போன்ற அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு கடந்த காலங்­களில் தீர்வு காணப்­ப­ட­வில்லை.
அதை­விட வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் நல்ல முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு தொழில் வாய்ப்­புக்கள் மற்றும் வரு­மானம் பெறக்­கூ­டிய இந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனவே இத்­த­கைய அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்குப் புதி­தாக வந்­தி­ருக்கும் அர­சாங்­கத்­துடன் நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் பேச்சு வார்­ததை நடத்தி குறி்ப்­பிட்ட காலத்­திற்குள் தீர்க்க முயற்சி செய்­ய­வேண்டும் . இவற்­றுக்கு கால­வ­ரை­யறை ஒன்றை ஏற்­ப­டுத்தி அந்த கால­வ­ரை­ய­றைக்குள் செய்­து­மு­டிக்­க­வேண்டும்.
இரண்­டா­வது விடயம், மாகா­ண­ச­பையின் அதி­கா­ரங்­களை முழு­தை­யா­கப்­பெற முயற்­சிக்க வேண்டும். புதிய அர­சியல் சீர்த்­தி­ருத்­தற்கு காத்­தி­ராமல் இது உடன் செய்­யப்­ப­ட­வேண்­டிய கடப்­பாடு, பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இருக்க வேண்டும்.மூன்­றா­வது நீண்­ட­கால திட்­ட­மாக இருக்க வேண்­டி­யது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வின் அடிப்­படை எவ்­வாறு இருக்க வேண்டும் என்­ப­தாகும். அதனை சரி­யாக ஆராய்ந்து புதி­தாக அமைந்­துள்ள அர­சாங்­கத்­துடன் பேசித் தீர்க்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி நாம் பெறக்­கூ­டி­யதை பெற­வேண்டும். இதை மேலே குறிப்­பிட்ட மூன்று திட்­டத்தின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­வது சிறந்­த­தாகும். நீ்ண்டகால திட்­டத்தை சமஷ்டி முறையை அல்­லது அதற்கு இணை­யாக வரக்­கூ­டிய ஒன்றை பெறு­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். இந்த நம்­பிக்­கையை வைத்­துத்தான் தமிழ் மக்கள் தமக்­கெனப் பேரம் பேசும் சக்­தி­யாக கூட்­ட­மைப்பு இருக்க வேண்­டு­மென வாக்­க­ளித்­துள்­ளார்கள்.
இவற்றை விட மேலும் ஒரு யுக்­தியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பின்­பற்ற வேண்டும். அல்­லது உபா­ய­மாக கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்­க­ளுடன் நல்­லு­றவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்று வரு­கின்ற போது முஸ்லிம் மக்­க­ளு­டைய நல்­லு­றவை பேணாமல் வட கிழக்கு இணைப்பை கொண்டு வரு­வது கஷ்­ட­மாக இருக்கும். சிங்­கள மக்­க­ளி­டை­யேயும் நம்­பிக்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கட்­டி­வ­ளர்க்க வேண்டும். அவர்­க­ளு­டைய ஆத­ரவு இல்­லாமல் எமது அர­சியல் தீர்வை நீண்­ட­கா­லத்தில் பெறு­வது கடி­ன­மாக இருக்கும்.
இவை பேணப்­ப­டாத பட்­சத்தில் எந்­த­வொரு இலக்­கையும் அடை­வது கடி­ன­மா­கி­விடும். தமிழ் மக்­களும் ஏமாற்­றப்­பட்­ட­வர்­க­ளா­கவே ஆகி­வி­டு­வார்கள் என்றார்.வலி­காமம் தெற்கு பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் தியா­க­ராஜா பிரகாஸ் கருத்துத் தெரி­வித்த போது, தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் த.தே.கூ. தான் என்­பதை இந்த தேர்தல் மூலமும் மக்கள் நிரூ­பித்­துள்­ளனர். மக்­க­ளு­டைய ஆணையைப் பெற்ற கூட்­ட­மைப்பு, மக்­களின் உட­னடிப் பிரச்­சி­னைக்குத் தீர்­வைக்­காண உழைப்­ப­துடன் நிரந்­தரத் தீர்வை விரை­வாக எட்­ட­வேண்­டிய தேவை­யுள்­ளது.
மக்­க­ளிடம் அடிக்­கடி சென்று அவர்­களின் தேவைகள் தொடர்­பிலும், பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் நாட்டம் காட்ட வேண்டும். இனியும் தொலை­பே­சி­களை முடக்கி, கொழும்பை தஞ்­ச­மாகக் கொள்ளும் நிலைமை மாற­வேண்டும். முன்னாள் போரா­ளிகள் விவ­காரம், காணமல் போனோர், விடயம் தொடர்­பாக விடு­ப­டாத காணிகள் சம்­பந்­த­மாக விரை­வாகத் தீர்வு காண மக்கள் அளித்த ஆணையை கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்த வேண்டும் என்றார்.
இதே கருத்­தையே மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சமூக சிவில் அமைப்­புச்­சார்ந்த டாக்டர் தோமஸ் தெரி­வித்தார்.
புலம்­பெயர் தமிழ் அமைப்பு பிர­தி­நி­தி­க­ளுடன் தொடர்பு கொண்டு வின­விய போது அவர்கள் கூறு­கையில்,
வர­லாற்றில் மீண்­டு­மொரு சந்­தர்ப்பம் த.தே.கூ. அமைப்­புக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இச்­சந்­தர்ப்பம் கைந­ழுவிப் போகு­மாயின் இன்­னு­மொரு சந்­தர்ப்­பத்தை நாம் பெற­மு­டி­யாமல் போய்­விடும். அது மாத்­தி­ர­மின்றி மக்கள் முன் செல்­ல­மு­டி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டு­விடும். எனவே கூட்­ட­மைப்பு மக்களோடு மக்களாக அவர்களின் அபிலாஷைகளை அனுமானித்தவர்களாக இருக்க வேண்டும். வெற்றியின் பின் தொலைந்து போனவர்களாக               மக்களை மறந்தவர்களாக இருப்பார்களாளால் மக்களால் அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும்.
தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்றவர்கள், எக்காலத்திலும் இதையொரு புனித கடமையாக மேற்கொள்ளவேண்டும். மக்களை உதாசீனம் செய்வது தொலைபேசிகளை முடக்கி தப்பித்துக் கொள்வது, மக்களின் பிரச்சினைகளை கேட்டும் கேளாமலும் பார்த்தும் பாராமலும் நடந்து கொள்வது தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.மீண்டும் மக்களிடம் செல்லக்கூடிய சகல வழிகளையும் வெற்றிபெற்றவர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகுமென கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment