August 23, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசி­யப்­பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை கல்­மு­னைக்கு நியமிக்க கோரி தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்கள் பாண்­டி­ருப்பு திரௌ­பதை அம்மன் ஆலயமுன்
­றலில் சுழற்சி முறையில் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
அம்­பாறை மாவட்­டத்தில் வாழும் தமிழ் மக்கள் இங்கு வாழும் சகோ­தர இன அர­சி­யல்­வா­தி­க­ளினால் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குட்­பட்டு வாழ்­வ­தா­கவும் அம்­பா­றையில் தமிழ் மக்­களின் இருப்பை தக்க வைப்­ப­தற்கும் தேசி­யப்­பட்­டியல் மூலம் உறுப்­பினர் ஒருவரை இங்கு வழங்­க வேண்டும் என தெரி­வித்தே இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை 8 மணி தொடக்கம் இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதில் கலந்து கொண்­டுள்ள மக்கள் “அர­சியல் அநா­தை­க­ளான எங்­க­ளுக்கு ஆத­ரவு தாருங்கள்”கல்­மு­னைத்­தொ­குதி தமிழ் மக்­களின் தன்­மானம் காத்­தி­டுங்கள் தமிழ் தேசி­யத்தின் உணர்­விற்கு மதிப்­ப­ளி­யுங்கள் அண்ணன் வேல் முருகு கன­வினை நன­வாக்­குங்கள் தேசி­யப்­பட்­டியல் உறுப்­பு­ரி­மையை கல்­மு­னைத்­தொ­கு­திக்கு வழங்­குங்கள் போன்ற சுலோ­கங்­களை தாங்­கி­ய­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இப்­போ­ராட்­டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்­பரம் கருத்து தெரிவிக்கையில் அம்­பாறை மாவட்­டத்­தமிழ் மக்கள் அரசியல் அநா­தை­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வி­கி­தா­சார தேர்தல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட்ட பின்பு 8 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பொத்­துவில் தொகு­திக்கு பெற்­றுக்­கொ­டுத்­துள்ளோம். இது­வரை கல்­மு­னைத்­தொ­கு­திக்கு எவரும் தெரி­வா­க­வில்லை.
கல்­மு­னையில் வாழும் தமி­ழர்கள் நெருக்கு வாரங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்­கின்­றனர்.கல்­முனை யாரு­டைய இதயம் என்ற பெரும் சர்ச்­சை­யுள்­ளது. இங்கு இழந்­த­வை­களை மீளப்­பெறா விட்டாலும் இருப்பதையாவது பாதுகாப்பதற்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை கல்முனைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். தமக்கு சாதகமான பதில் கிடைக்கும்வரை இப்போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment