August 23, 2015

களுவாஞ்சிக்குடியில் காணாமல்போனார் தொடர்பான விசாரணையின் 2ம்நாள் அமர்வு இன்று( படங்கள் இணைப்பு)

காணாமல் போனோர் தெர்டர்பான விசாரணையை மேற்கொளும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணாமல்போனோருடைய உறவினர்கள் சுமார் 200 மேற்பட்டோர் 11.00 மணிக்குள் வருகை தந்துள்ளதாக தெரிவித்தனர்.பதிவுகள் தற்பொழுவரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்றைய முதல் நாள் அமர்வில் 153 முறைபாடுகள் நடைபெற்றதாக தெரிவித்தனர்.
இதன்போது முறைபாடுகளுக்கு அழைக்கப்பட்டவர்களும் புதிதாக அழைக்கப்பட்டவர்கள் என இன்றைய தினத்தில் வருகை தந்திருந்தனர்.

No comments:

Post a Comment