August 2, 2015

கொழும்பில் 96 மாடி கோபுரம் அதிசயமா? . (படம் இணைப்பு)

கடந்த 1996ஆம் ஆண்டு உலக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது.
அதுவரை உலக கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட இலங்கை அணி விசுவரூபம் எடுத்தது இப்படிதான்.

அந்த வெற்றியை என்னென்றும் நினைவு கொள்ளும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்,பிரமாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. 

சுமார் 363 மீட்டர் உயரத்தில் 96 அடுக்குகளுடன் உருவாகும் இந்த கட்டிடம்தான் இலங்கையிலேயே மிக உயரமாக கட்டிடமானது ஆகும். 

இந்த கட்டிடத்தில் பொழுது போக்கு மையம், வணிக வளாகம், நீச்சர் குளம், உடற்பயிற்சி மையம், உள்ளிட்ட 366 அறைகள் அமைக்கப்படும். 2 ஏக்கர் சுற்றளவில் 4 ஆண்டு காலத்திற்குள் இந்த கிரிக்கெட் கோபுரத்தை கட்ட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த 1996ஆம் ஆண்டு லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இலங்கை அணியின் குருசிங்கே 65, அரவிந்த டி சில்வா 107 , ரணதுங்கா 47 ரன்களும் எடுத்து இலங்கை அணி முதன் முறையாக உலகக் கோப்பையை வெல்ல வித்திட்டனர். 

No comments:

Post a Comment