தேர்தலில் 91 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற முடிந்த போதிலும் தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பை காட்டும் விதமாகவே தான் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெற்றியை எதிர்ப்பார்த்து தான் குருணாகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை எனவும் இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது நிலைப்பாட்டை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment