மக்கள் விடுதலை முன்னணி பரந்த அதிகாரங்களுடன் கூடிய புதிய முன்னணியை அமைத்து 2020ம் ஆண்டு இந்நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக அக்கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உருவாக்கப்படும் பரந்த முன்னணியின் பெயர் மக்கள் விடுதலை முன்னணி அல்ல, சின்னம் மணி அல்ல, புதிய பரந்த முன்னணிக்கு இந்நாட்டின் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இணைவார்கள். நாங்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்குவோம்.
தற்போதே அதற்கான நற்சகுனங்கள் வெளிப்பட்டுள்ளது. ரணில் கூறுகின்றார் 127ஆசனங்களை பெற்றுக்கொள்வோம் என்று,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார் 117ஆசனஙகளை பெற்றுக்கொள்வோம் என்று,
இவ்விரண்டையும் கூட்டினால் 247 ஆசனங்கள். நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 225.
இவ்விருவரில் 100 ஆசனங்களை ஒருவரினாலும் பெற்றுக்கொள்ள முடியாதென நான் கூறுகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment