ஜேர்மனியில் வீடு ஒன்றின் பதுங்கு அறையில் இருந்து இரண்டாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்திய பீரங்கி , நீர் மூழ்கி வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் ஹெய்கெண்டொர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து அந்த வீட்டை பொலிசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது ரகசிய அறையில் இருந்து பிரங்கி, நீர்மூழ்கி வாகனம் மற்றும் ஏராளமான ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த ஆயுதங்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
மேலும் இவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்.
இந்த பிரங்கி தற்போது இயக்கத்தில் இல்லை என வீட்டின் உரிமையாளரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதே போல் இந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளரான முதியவர் மீது தவறு இல்லை என்று Heikendorf பகுதியின் மேயரும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment