முன்னாள் எம்.பி. ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபரான கடற்படை கப்டனுக்கு நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்த னையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை கப்டன் சமந்த முனசிங்க வுக்கே கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான கப்டன் சமந்த முனசிங்கவுக்கு இந்தப் படுகொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் செல்ல சமந்த முனசிங்கவுக்கு நீதவான் நிரோசா பெர்னாண்டோ அனுமதி அளித்தார்.
இந்தப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment