தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இறுதி யுத்த காலத்தில் காப்பாற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே நழுவ விட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேசம் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி உள்ளது.
இதனால் புலிகள் இயக்கத்துடன் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபட முடியாத சங்கடம் உலக நாடுகள் பலவற்றுக்கும் நேர்ந்தது.
ஆனால் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்துவதில் இவற்றுக்கு தடை எதுவும் இருக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா, நோர்வே, இந்தியா அடங்கலான நாடுகள் பலவும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி யுத்தத்தை நிறுத்த பகீரத முயற்சிகள் எடுத்தன.
ஆனால் யுத்தத்தை நிறுத்த தவறுகின்ற பட்சத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளை அறிந்து கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு வீம்பு பண்ணியது.
உதாரணமாக யுத்த நிறுத்தம் சம்பந்தமாக பேச்சு நடத்த வாருங்கள் என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் யுத்தத்தை நிறுத்துங்கள், பேச்சுக்கு வருகின்றோம் என்று இந்த அழைப்புக்கு இந்தியாவுக்கு பதில் கொடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
இப்பதில் அடங்காப்பிடாரித்தனமானது மாத்திரம் அல்ல அற்பத்தனமானதும்கூட.
ஏனென்றால் யுத்தம் நிறுத்தப்படுகின்ற பட்சத்தில் யுத்த நிறுத்தம் சம்பந்தமான பேச்சுக்கே தேவை இல்லை.
அயல் நாடான இந்தியாவுடன் பேசி, யுத்தத்தை நிறுத்தி, புலிகளை காப்பாற்றி இருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே விலகியது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் புலிகளின் அழிவுக்கு மாத்திரம் அன்றி முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊக்கம் கொடுத்தது.
இதனிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் தினத்தந்தி பத்திரிகைக்கு அதிரடிப் பேட்டி ஒன்று வழங்கி இருந்தார். புலிகளை அழிக்க இந்தியா உதவ வேண்டும் என்று இவர் இதில் பகிரங்கமாக கோரி இருந்தார்.

No comments:
Post a Comment