July 28, 2015

நீங்கள் ஐ போன் பாவனையாளரா...? போலி தொழிற்சாலை முற்றுகை!

சுமார் 41,000 போலி ஐ போன்களை தயாரித்த தொழிற்சாலையொன்று சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நடத்திச்சென்ற 9 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களிலுள்ள பகுதிகளை சேகரித்து போலியான ஐ போன்களை, 100 தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இதுவரை 19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஐ போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலை கடந்த மே மாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பலர் ஐ போன் பாவனையாளராக உள்ள நிலையில் பலர் தங்கள் ஐ போன்களை பரிசோதனை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளனர் என உலகின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment