இன்று காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழர் விடுதலைக்காக எமது மூச்சை நாம் ஜ.நா சபை வரை எடுத்துச் செல்லவதற்கான இவ்வளவு தியாகங்களை செய்து விட்டு விடுதலை என்ற மூச்சை முன்னின்று நடாத்திய தமிழீழ விடுதலை புலிகள் இன்று இல்லாமல் இருக்கின்ற போது சரியான தலைமைத்துவத்தின் கீழ் அந்த தமிழருக்கான விடுதலையை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை மக்கள் ஆகிய உங்களுக்கு இருக்கிறது.
எனவே இந்த மக்கள் ஒரு சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கப்பட வேண்டியிருக்கிறார்கள். தமது தேசியத்தை 100 வீதம் நேசிப்பவரை ஆதரிக்க வேண்டிய கட்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் தேசியத்தை நாம் நேசிக்காவிட்டால் நாம் பாரிய பின்னடைவை நோக்கி தள்ளப்படுவோம் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் பல்வேறு அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டார்கள். புதிய அரசாங்கம் வந்த போதும் தமிழரின் அடக்குமுறைகள் இரகசியமான முறையில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment