July 20, 2015

விடுதலைப் புலிகள் உருவாக்கிய தேக்கம் காட்டில் இராணுவமுகாம் நிறுவப்பட்டுள்ளது !

விசுவமடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புப் பிரிவு நாட்டிய தேக்குமரக்காட்டுப் பகுதி இப்போது இராணுவ முகாமாக காட்சியளிக்கிறது. அழகும் ரம்மியமும் மிக்க அந்தப் பகுதி கடந்த காலத்தில்
மக்களின் பொழுது போக்கு இடமாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்போது அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாது என்கிறார் எமது செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வனவளப் பாதுகாப்புத் துறை அன்றைய காலத்தில் மரம் நாட்டும் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. யுத்தத்தின் போது மரங்கள் அழிக்கப்பட்டாலும் புதிய மரங்களை உருவாக்குவதிலும் காடுகளைப் பேணுவதிலும் விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புத்துறை ஒரு கொள்கையுடன் நடைமுறையில் ஈடுபட்டது. மண்ணுக்கு உகந்த தேக்குமரங்களை நாட்டுவதில் தமிழீழ வனவளப் பாதுகாப்புத்துறை கடும் அக்கறையை எடுத்தமைக்கு வடக்கில் பரவலாக காணப்படும் தேக்குமரக்காடுகள் சாட்சி என்கிறார் எமது செய்தியாளர்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்த ஒருவர் வடக்கில் முல்லைத்தீவில் தமிழீழ வனவளப் பாதுகாப்புத்துறை வளர்த்த தேக்குமரங்களை அழித்து மரங்களை விற்பனை செய்ததுடன் அந்த இடங்களை அபகரிக்க முயற்சி செய்தார். ஆனால் விடுதலைப் புலிகளை சர்வதேசம் பயங்கரவாதிகள் என்கிறார்கள். எந்த பயங்கரவாத இயக்கம் இவ்வாறு செய்து , தமது சொந்த தேசத்தை காத்திருக்கிறது ? சொல்ல முடியுமா ?

No comments:

Post a Comment