July 20, 2015

அகதிகள் படகு ஒன்று அவுஸ்ரேலியாக் கடற்பரப்பில் அவதானிப்பு!

அகதிகளின் படகொன்று அவுஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஈழ அகதிகளும் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று அவுஸ்திரேலிய கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பாரா கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றில் பயணிக்கும் பணியாளர்கள் இதனை அவதானித்துள்ளனர்.
இதில் பயணிப்போர் குறித்த விபரங்கள் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் குறித்த படகு அவுஸ்திரேலிய கரையை சென்றடையும் முன்னரே திருப்பி அனுப்பப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment