July 6, 2015

முன்னாள் போராளிகளிற்கு கூட்டமைப்பு கதவடைப்பு! வித்தியாதரன் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி எனும் பெயரினில் செயல்படும் குழுவொன்றின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் இத்தகவலை கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதால் கட்சிக்கு பாரிய சிக்கல் நிலை உருவாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசிவரும் இச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைந்துக்கொள்வது உசிதமானதல்ல. ஆகையினால் இந்த முடிவினை கூட்டமைப்பு ஒருபோதும் எடுக்காது என சம்பந்தன் தங்களிடம் தெரிவித்ததாகவும் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடுஇ கே.பி.இ கருணாஇ பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் இணைந்து உளவு வேலைகளில் ஈடுபடுவதுபோல் நீங்களும் ஈடுபடப்போவதாக கூறுகிறார்கள். ஆனால்இ அதனை நாங்கள் நம்பவில்லை என்றும் சம்பந்தர் தங்களிடம் தெரிவித்ததாகவும் வித்தியாதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment