July 6, 2015

23. 07. 2015அன்று Bern மானிலத்தில்கறுப்புயூலை நினைவேந்தலும் தமிழினப்படுகொலையை விளக்கும் கண்காட்சியும்!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.

தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான கொடிய கூட்டுப்படுகொலை நாள். அன்றோடு நின்றுவிட்டதா இனப்படுகொலை??? இன்றும் சத்தமின்றி தொடர்கிறது…நிழலாக…

ஆகவே, தமிழர்கள் மீதான இனப்படுகொலைபற்றிய விழிப்புணர்வை நாம் வாழும் சுவிஸ் நாட்டின் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி எம்மினத்திற்கான நீதியைப் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும். அந்தப் பணியை முன்னெடுக்கும் நோக்குடன் சுவிஸ்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை சுவிஸ் தழுவிய ரீதியாக அனைத்து மாநிலங்களிலும் தமிழினப்படுகொலையை எடுத்துரைக்கும் கண்காட்சி நிகழ்வுகளை நடாத்தவுள்ளது.

எனவே சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கறுப்புயூலை நிகழ்விலும், கவனயீர்ப்பு கண்காட்சி யிலும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

போராட்டத்திற்கான தேவைகள் இருக்கும்வரை போராட்டங்கள் முற்றுப்பெறுவதில்லை.

காலம்: 23.07.2015
கவனயீர்ப்பு கண்காட்சி: 09:00 – 14:00 கறுப்புயூலை நிகழ்வு: 15:00 – 16:30
இடம்: Waisenhausplatz, 3011 Bern

தொடர்புகளுக்கு: 078 665 44 04,  076 328 58 99, 079 193 86 69

No comments:

Post a Comment