பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியானது என்று, தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின்
மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து 2014 பிப்ரவரி 18ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மத்திய அரசின் மனு 2014 ஏப்ரல் 1ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி சதாசிவம் தீர்ப்பில் திருத்தம்கோரி மத்திய அரசு 2014 மே மாதம் மனுத் தாக்கல் செய்தது. ஒரு வருடமாக நிலுவையில் இருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment