மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னின்று செயற்பட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் தற்போது அவர் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக மைத்திரிபால சிறிசேனவே அனுமதியளித்திருக்கும் காரணத்தினாலே அவர்கள் அவர் அவர் மீது தற்போது அதிருப்தி கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சிவில் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளதாவது,
தாம் மஹிந்த ஆட்சியை இல்லாது செய்ய வேண்டுமென்றே மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததாகவும் ஆனால் அதே மஹிந்தவுக்கு மைத்திரிபால சிறிசேனவே இடமளிப்பது ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயல் எனவும் அவ்வாறு அந்த ஆணையை மீறி செயற்பட அவருக்கு உரிமையில்லை. என ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment