இந்த மாதம்17ம் திகதி கதிர்காமம் கொடியேற்றத்திற்கு கலந்து கொள்வதற்கு மலையக தோட்டப்பகுதியில் உள்ள பக்தர்கள் 7வது முறையும் பாதயாத்திரையை நேற்று ஆரம்பித்தார்கள்.
மஸ்கெலியா பகுதியிலிருந்து பக்தர்கள் நேற்று மாலை வேளையில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
மஸ்கெலியாவிருந்து 400 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரையாக செல்வார்கள். ஒரு நாளைக்கு 35 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக பயணிக்கும் இவர்கள் நுவரெலியா பண்டாரவளை, வெல்லவாய, புத்தல வழியாக இந்த மாதம் 16ம் திகதி கதிர்காமத்திற்கு செல்வார்கள்.
பாதயாத்திரையில் செல்லும் பிரதான நகரங்களில் உள்ள கோவில்களிலும் விகாரைகளிலும் தங்குவதாக இவர்கள் தெரிவித்ததோடு கதிர்காமம் பருவகாலம் முடியும் வரை கதிர்காமத்தில் தங்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment