யாழ்ப்பாணத்திலுள்ள மயானச் சுவரொன்றில் யுவதியொருவரின் தொலைபேசி இலக்கத்தை எழுதிய வாலிபனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆனைக்கோட்டை இந்து மயானத்தின் சுவரில் அண்மையில் பெரிய எழுத்தில் தொலைபேசி இலக்கமொன்று எழுதப்பட்டிருந்தது.
அதில் ஆங்கிலத்தில் செக்ஸ் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதிக்கு வரும் வாலிபர் கூட்டம் அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த தொடங்கியது.
இதன் பின்னர்தான் தனது தொலைபேசி இலக்கம் பகிரங்கத்தில் எழுதப்பட்டுள்ளதை அந்த யுவதி அறிந்து கொண்டுள்ளார்.
இது பற்றி பொலிசாருக்கும் முறையிடப்பட்டுள்ளது. வாலிபன் ஒருவன் காதல் கோரிக்கை விடுத்ததாகவும், யுவதி அதனை மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபன் அந்த இலக்கத்தை எழுதியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment