July 18, 2015

பிரகீத் எக்நேலியகொட கடத்தப்பட்டு இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தி!

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலிய கொட, ராஜபக்ச அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டு இன்றுடன் 2 ஆயிரம் நாட்கள் பூர்த்தியாவுள்ளது.
இதனை முன்னிட்டு ஹெக்
நேலியகொடவின் மனைவி சந்தியா எக்நேலியகொட தலைமையில் கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் விசேட விரதத்துடன் கூடிய பூஜை நடைபெற்றது.
எக்நேலியகொட காணாமல் போய் இன்றுடன் 2 ஆயிரம் நாட்கள் கடந்துள்ள போதிலும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை.
2 ஆயிரம் நாட்களுக்கு முன்னர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தனது கணவனை மீட்டு தருமாறும், அவரை காணாமல் போக செய்த ராஜபக்சவினருக்கு தண்டனை வழங்குமாறும் காளி அம்மனிடம் வேண்டியதாக சந்தியா ஹெக்நேலியகொட கூறியுள்ளார்.

No comments:

Post a Comment