யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7
இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது.
தற்போது இது இரண்டு அல்லது மூன்று மடங்கால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2009 இல் வெளிநாட்டு வகை 6 ஆயிரத்து 598 லீற்றர் மதுபான வகைகள் நுகரப்பட்டன. ஆனால் 2013 இல் 61 ஆயிரத்து 134 லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் நுகரப்பட்டன எனத் தெரியவந்துள்ளது.
மேலும் 2009 இல் 5 இலட்சத்து 67 ஆயிரத்து 756 லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டது. இது 2013 இல் 20 இலட்சத்து 19 ஆயிரத்து 434 லீற்றராக அதிகரித்தது.
கள்ளின் நுகர்வும் 2009 ஐ விட 2013 இல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2009 இல் இதன் நுகர்வு 30 இலட்சத்து 51 ஆயிரத்து 959 லீற்றர்களாகவும், 2013 இல் 56 இலட்சத்து 63 ஆயிரத்து 60 லீற்றர்களாக உயர்வடைந்தது.
2015 இன் புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறாத போதும் ஒட்டுமொத்தமாக மதுபானத்தின் நுகர்வு 2013 இலும் விட பன்மடங்கு அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment