முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நல்லாசி வேண்டி ஏற்பாடுசெய்யப்பட்ட பாலுட்டும் தாய்மார்களின் புண்ணியதான நிகழ்வு கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று காலை
நடைபெற்றது.முருத்தொட்டுவே ஆனந்த தேரர் இந்த புண்ணியதானத்தை ஏற்பாடு செய்துள்ளார்.இந்த நிகழ்வில் இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த மாடுகளை முன்னாள் ஜனாதிபதி விடுவித்துள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.அதற்காக சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய வழிப்பாடுகளிலும் புண்ணிய கருமங்களிலும் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்.குருப் பெயர்ச்சி நடைபெறவுள்ள நிலையில், சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய சுப நாளில் சுப நேரத்தில் பகிரங்க அரசியலுக்கு மீண்டும் பிரவேசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment