ஜேர்மனி நாட்டில் குடியேறியுள்ள மற்றும் எதிர்காலத்தில் குடியேறும்
அகதிகளுக்கு செலவிடப்படும் நிதியை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு மருத்துவ
காப்பீடு வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டிற்கு பிறகு, ஜேர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கெல் தலைமையில் 16 அமைச்சர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், எதிர்வரும் 2016ம் ஆண்டு முதல் ஜேர்மனியில் குடியேறியுள்ள மற்றும் எதிர்காலத்தில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்களின் நலனிற்காக செலவிடப்படும் நிதியை இரட்டிப்பு செய்ய மத்திய அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அகதிகளின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சி பணிகளில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து நேரடியாக ஈடுபடும்.
North Rhine-Westphalia-யின் அமைச்சரான Hannelore Kraft கூறுகையில், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.
மேலும், 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், குடியுரிமை கோருபவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்வதுடன், அவ்வாறு தெரிவானவர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு தகுந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு தங்கும் வசதிகள், வாழ்வாதார செலவினங்களுக்காக தற்போது செலவிடப்படும் 500 பில்லியன் யூரோக்களை விட கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குடியுரிமை கோரி தற்காலிகமாக தங்கியுள்ள நபருக்கு சராசரியாக 12,500 யூரோக்கள் செலவிடப்படுகிறது.
மேலும், நடப்பாண்டில், 4 லட்சத்து 50 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் சுமார் 5.6 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கவேண்டும் என்றும் இவற்றை ஆண்டுதோறும் 1 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் வழங்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அகதிகளின் திட்டப்பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவான தகவல்கள் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment