ஜேர்மனியில் ‘டிக்கெட்’ இல்லாமல் ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ஓடும்
ரயிலில் நிகழ்த்திய சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஜேர்மனியில் உள்ள Munster நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் Bremen நகரிலிருந்து Hannover நகருக்கு செல்லும் ரயிலில் கடந்த சனிக்கிழமை அன்று பயணம் செய்துள்ளார்.
Verden நகருக்கு பயணம் செய்துக்கொண்டிருந்த அந்த நபர், பயணத்திற்கான முறையான டிக்கெட் எடுக்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவரை நோக்கி டிக்கெட் பரிசோதிகர் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
டிக்கெட்டிற்கு 10 யூரோக்கள் கட்டணத்தை செலுத்த விரும்பாத அந்த நபர், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்காமல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சென்றுக்கொண்டிருந்ததால், திடீரென அவசர வழி கதவு பட்டனை அழுத்திய அந்த நபர், கதவு திறந்தவுடன் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார்.
இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கீழே விழுந்த அந்த நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், எழுந்து ஓடியுள்ளார்.
சிறிது தூரம் ஓடிய அந்த நபர் திடீரென சுயநினைவின்றி ரயில் பாதையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
நபர் ஒருவர் பாதையில் மயங்கி கிடப்பதை பார்த்த அவ்வழியாக வந்த ரயில் ஓட்டுனர், வண்டியை நிறுத்தி விட்டு அந்த நபருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ரயில் நிலைய அதிகாரி ஒருவர், ரயிலில் இருந்த கீழே குதித்த இடத்தில் எண்ணற்ற மின்சார கம்பிகள் இருந்துள்ளதால் அவற்றில் ஒன்றில் சிக்கி இருந்தால் கூட அந்த நபரை காப்பாற்றி இருக்க முடியாது.
10 யூரோக்கள் கட்டணத்திற்கு உயிரையே பணயம் வைத்த அந்த நபரின் செயல் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment