June 18, 2015

நந்திக்கடலில் சிங்கள மீனவர்கள் கட்டுப்படுத்த விசேட குழு-ரூபாவதி கேதீஸ்வரன்!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சிங்கள மீனவர்களை தடுக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கடற்படையினரின் துணையுடன் சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் காவற்துறை அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment