June 18, 2015

விடுதலைக்கான அழைப்பும் ஈழவிடுதலையும் ! 18 ஜூன் 1940 பிரான்சு நாட்டின் விடுதலைக்கு முக்கியமான நாள் !

அன்று ஹிட்லரின் ஜெர்மனியிடம் அகப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டு மக்களளுக்கு  லண்டனில் இருந்து ஒரு செய்தி வந்தது!"பிரான்சு ஒரு போர்களத்தில் தோற்று இருக்கிறது -  ஆனால் பிரான்சு இன்னும் போரில்
தோற்கவில்லை"  என்ற செய்தியை லண்டனில் இருந்து பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் டி கோல்;; விட்ட செய்தியின் ஒரு பகுதி இது.

18 ஜூன் 1940 அடோல்ப் ஹிட்லரின் தலைமைiயிலான ஜேர்மனியப் படைகளின் கரங்களில் பிரான்சு தேசம் வீழ்ந்த காலப்பகுதி. நாடிழந்து பேரிழப்புகளுடன் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போய் நின்றனர் பிரேஞ்சு மக்கள். அளப்பரிய தியாகங்கள் புரிந்தும் தங்கள் தேசத்தைக் காப்பாற்றிவிட முடியவில்லையே என்ற ஏக்கமும் இனி தேசம் விடுதலை பெறுவற்கான அறிகுறிகள் ஏதுமின்றி அவநம்பிக்கை இருள்சூழ்ந்த காலத்தில் வீழ்ந்து கிடந்தனர் மக்கள்.

தூரத்தில் தெரியும் நம்பிக்கை ஒளியினைப்போல பிரித்தானியாவிலிருந்து 'பிரான்சு தேசவிடுதலைக்கான அழைப்பினை' ஜெனரல் டீ கோல் அவர்கள் விடுத்தார்கள். இழப்புக்களால் நொருங்கிப்போயிருந்த மக்கள் உயிர்த்தெழுந்தவர்கள் போல் உற்சாகமடைந்தனர். ஜெனரல் டி கோலின் விடுதலைக்கான குரல் தேச ஒற்றுமைக்கான அறை கூவல் ஒட்டுமொத்த மக்களின் ஒரே குரலாக ஓங்கியொலித்தது. நம்பிக்கை இழந்திருந்த மக்கள் நெஞ்சுரம் பெற்றனர். நாட்டினை இழந்து தோல்வியினைத் தழுவியிருந்த மக்கள் அணியணியாகத் திரண்டு வெற்றிகளைக் குவித்தனர்.

18 ஜூன் 1940 பிரான்சு தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மகத்தான நாள்!

அன்று லண்டன் நகரில் இருந்து வந்த அழைப்பு, நம்பிக்கையுடன் எழுந்த மக்கள், உலகப்படைளுடன் சேர்ந்து இழந்த தேசத்தை மீட்டனர்.

பிரெஞ்சு விடுதலைப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கின்றது. நாட்டை இழந்த பின்பும் பேரிழப்பைச் சந்தித்த பின்பும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து இருந்து கொண்டே ஜெனரல் டி கோல் விடுதலைக்கான அழைப்பினை விடுத்ததோடு தேச விடுதலைக்கான தயார்ப்படுத்தலையும் செய்தார்.

இதனூடாகப் புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் எமது விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய பங்கினை வகிக்க முடியும் என்பதை சிந்தித்து உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

அன்று பிரான்சு நாட்டை விடுதலை செய்ய லண்டனில் இருந்த ஒரு மாபெரும் படையை உருவாக்கி தனது நாட்டை விடுதலை செய்தது போல் -இன்று ஈழத் தமிழரின் விடுதலைக்காக 12 கோடி தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள். 18 மே 2009 தமிழின படுகொலைக்கு பின் - தமிழர்களுக்கு விடுதலை தேவை என்பதை உலகத்தில் வாழும் அணைத்து தமிழர்களும்- அவர்களுடன் சேர்ந்து விடுதலைக்காக வேண்டி போராடும் அத்தனை மக்களும் குரல் கொடுக்கிறார்கள்.

நாம் போராடி விடுதலை பெற்று எழுந்து நிற்பதா? அல்லது அடிமையாக எதிரியின் காலடியில் வீழ்ந்தே கிடப்பதா? என்ற கேள்விக்கான விடையாக பல்லாயிரக்கணக்கான மாவிரர்களினதும் மக்களினதும் உயிர்த்தியாகங்களின் முன்னால் நின்று கொண்டு எதனைச் சொல்லப்போகின்றோம்? ஒவ்வொருவரும் உளத்தூய்மையோடு இந்தக்கேள்வியினை நாம் எம்மிடமே கேட்டுப்பார்க்க வேண்டும்.
காலவோட்டத்தில் எம்மினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பையும் கொடூர அநீதிகளையும் நாம் மறந்து விடுவோம் என்றே எதிரி கனவு காண்கின்றான். உள்நாட்டு விசாரணை சர்வதேச விசாரணை எனக் கால இழுத்தடிப்புக்கள் இந்நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை எமது நினைவுகளில் இருந்து எவராலும் ஒருபோதும் அகற்றிவிட முடியாது. வரலாற்றை மறந்துவிடும் இனம் விடுதலை பெறுவற்குத் தகுதியற்றது.
ஒரு தேசத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த இந்நாளில் நாம் விடுக்கும் அழைப்பு :

தழிழீழ தேசத்தின் இறைமையினை மீட்டெடுப்பதே இத்தனை ஆண்டுகால விடுதலைப் போராட்டத்திற்கான ஓரே தீர்க்கமான முடிவாகும். தமிழீழ விடுதலை என்பது வரலாற்றில் தவிர்க்க முடியாததாகும். உலகத் தமிழர்களின் ஓரே விருப்பமும் தமிழீழமே ஆகும்.

உலக தமிழ் மக்களுடன் கைகோர்த்து விடுதலை என்ற பாதையில் நாம் அனைவரும் பயணிப்போம். எமது தேசிய தலைவர் கூறியது போல் ‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது" என்ற சிந்தனையுடன் "ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.

எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.

இந்த சிந்தனைகளுடன் உலகத் தமிழர்களாக நாம் ஆரம்பிக்கும் பயணம் " தமிழீழம்" என்ற நாட்டை, இழந்த எமது இறைமையை மீட்ட பின்பே நிற்கும்.

ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

No comments:

Post a Comment