யாழ்ப்பாணம் சங்கானை சந்தைக்கு பின்புறமாகவுள்ள வீடொன்றிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், சுன்னாகம் மேற்கு குண்டுக்குளம் பகுதியில் இருந்து வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் கடந்த 15ஆம் திகதி திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், மோட்டார் சைக்கிளை இன்று (வியாழக்கிழமை 18) மீட்டனர்.
மோட்டார் சைக்கிளில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாயுடன் மீட்கப்பட்ட இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
No comments:
Post a Comment