வடமராட்சியின் நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் பொலிசார் நடத்திய வேட்டையில் 23 வாலிபர்கள் கைதாகியுள்ளனர். பெண்களுடன் சேட்டை புரிந்தது, பொது இடங்களில் கூடி இடையூறு ஏற்படுத்தியது, நெல்லியடி
பஸ்தரிப்பிடத்தில் கூடி நின்று பாடசாலை மாணவிகளுடன் சில்மிசம் புரிய முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்களில் இந்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர்.
வதிரி சந்தியை மையமாக கொண்ட மின்னல் குறூப், மகாத்மா தியேட்டரின் முன்னால் கூடும் சுல்தான் குறூப் போன்ற சமூகவிரோத கும்பலை சேர்ந்தவர்களே பெருமளவில் கைதாகியுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த ரௌடிக்கும்பல்கள் தொடர்ச்சியாக பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், ரௌடிகள் மீது பொலிசார் பாய்ந்துள்ளனர்.
கைதான ரௌடிகளின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அத்துடன் இன்று அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
வீதியோர ரௌடிகளை கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment