June 3, 2015

பேஸ்புக்கால் கூடிய இளசுகள்: தலைக்கு 1,500 கறந்து கொண்டு தப்பியோடி கில்லாடிகள்!

தெகிவளை கடற்கரை பிரதேசத்தில் பேஸ்புக்கால் கூட்டப்பட்ட கூட்டத்தின் பிரதான சூத்திரிகளை பொலிசார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர். சட்டத்தை எள்ளவும் மதிக்காமல் நடத்தப்பட்ட இந்த கூட்டமென பொலிசார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர். போதைப்பொருள்,
கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்களுடன் இந்த களியாட்டத்தில் கலந்து கொண்ட 13பேரை பொலிசார் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவரிற்கு ஏற்பட்ட விபரீத எண்ணமெ இதற்கு கருவாக அமைந்துள்ளது. இதனையடுத்து தனது கொழும்பு நண்பர்கள் சிலருடன் இணைந்து பேஸ்புக்கில் பிரசாரம் செய்துள்ளார். தெகிவளை கடற்கரையிலுள்ள ஒரு களியாட்ட இடத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த மே 23 இந்த களியாட்டம் நடந்தது. அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையானவர்கள் கூடினார்கள். சுமார் 1500 பேர் மட்டுமே கூடுவோம் என அந்த இடத்தை முன்பதிவு செய்துவிட்டு, 3000 பேருக்கான நுழைவுச்சீட்டு தயாரித்து எடுத்து வந்துள்ளனர். எதிர்பார்த்த மாதிரியே அங்கு 3000 பேர் குழுமியுள்ளனர். ஒவ்வொருவரிடமும் 1500 ரூபா வீதம் அறவிடப்பட்ட பின்னரே களியாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் அனைவரம் 17- 22 வயதானவர்கள் என கூறப்படுகிறது.
இந்த களியாட்ட நிகழ்வை அறிந்த கலால் திணைக்கள அதிகாரிகள் மாறுவேடத்தில் கலந்து கொண்டனர். எதிர்பார்த்த மாதிரியே அங்கு சட்டவிரோத செயற்பாடுகள், மது விற்பனை, போதைப்பயன்பாடு நடந்துள்ளது. உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினார்கள். பொலிசார் அந்த பகுதியை வளைத்து, 13 பேரை கைது செய்தனர். இருவரிடம் வெளிநாட்டு போதைப்பொருளும், எட்டுப் பேர் கஞ்சாவும், மூவர் வெளிநாட்டு மதுபானமும் வைத்திருந்த நிலையில் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்டனர்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சூத்திரதாரிகள் பணத்தை சுளையாக அள்ளிக்கொண்டு கம்பி நீட்டி விட்டனர்.
இவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment