புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன்
வித்தியாவின் படுகொலையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
அரச அலுவலகங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள்
இடம்பெறாமலும்,வங்கிகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கதவுகள் பூட்டப்பட்டும் தமது எதிர்ப்பினை அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று மாவட்டத்தில் பல இடங்களிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தால் காரணமாக வாகரை, கிரான், வாழைச்சேனை, சித்தாண்டி, செங்கலடி, புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு நகர், கொக்கட்டிச்சோலை, கல்முனை போன்ற பகுதிகள் வெறிச்சோடிக்கிடத்ததை காணக்கூடியதாக இருந்தது.

No comments:
Post a Comment