May 1, 2015

யாழில் இருந்தால் நீயும் கெட்டு குட்டிச்சுவயாழில் இருந்தால் நீயும் கெட்டு குட்டிச்சுவராவாய்: பெடியளை கொழும்புக்கு அனுப்பும் பெற்றோர்!

ஒரு காலத்தில் கொழும்புக்கு பிள்ளைகளை அனுப்ப யாழில் வசித்து வந்த பெற்றோர் அஞ்சுவார்கள். அங்கே கலாச்சாரம் வேறு. நாகரீகமாக இருப்பார்கள்.

இதனால் கொழும்பு சென்றால் தனது மகன் கெட்டுவிடுவானோ என்று தமிழ் பெற்றோர் நினைப்பது வளக்கம். ஆனால் தற்போது பல தமிழ் குடும்பங்கள் தமது ஆண் பிள்ளைகளை, கொழும்புக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
அந்த அளவு யாழ்ப்பாண நிலை மாறிவிட்டது. 14 வயது சிறுவர்களிடம் கூட கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருக்கிறது. அதுபோக அவர்களுக்கு 18 வயது தொடர்க்கம் 24 வயதுடைய இளைஞர்களோடு நல்ல தொடர்பும் இருக்கிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு 15 வயதுச் சிறுவன் தனது சக மாணவனோடு சண்டையிட்டால் அதே தினம் மாலை தனக்கு தெரிந்த நாலு ரவுடிகளை வரவளைத்து அவனை வாளால் வெட்டவைக்க முடியும் என்ற நிலை தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது.
கூடாத சகவாசங்கள் அதிகரித்துள்ளது. பல இளைஞர்களுக்கு நண்பர்களாக இருப்பதே சிறுவர்கள் தான். இவர்கள் தமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கூட, தனக்கு தெரிந்த ரவுடிகளை வைத்து பிரட்டி எடுக்க தயங்க மாட்டார்கள்.
அதுபோக அவர்கள் சிறுவர்கள் போல இருப்பதும் இல்லை. எகத்தாளமாக ஒரு தெனாவட்டாக தான் திரிகிறார்கள். அவர்களை தட்டிக் கேட்க்கவும் முடியாது.
புலிகள் யாழில் பலமாக இருந்தவேளை பச்சை மட்டை அடி என்ற வைத்தியத்தை கையாண்டு வந்தார்கள். அது மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாதா என்று தற்போது பெற்றோர்கள் ஏங்குகிறார்கள்.

No comments:

Post a Comment