அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டை
புரிந்த ஆசாமியொருவருக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி
எம்.இளஞ்செழியன் 9 மாத சிறைத்தண்டனையும் ஆயிரத்து ஐநூறு ரூபா
அபராதமும் விதித்துள்ளார். அத்துடன்,பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25
ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆசாமியை கல்முனை மேல்நீதிமன்றத்தில் ஆஜரான போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டு, அத்தீர்ப்பு நேற்று முன்தினம் அக்கரைப்பற்று நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தை சேர்ந்த இந்த ஆசாமி, அதே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அப்போது அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அப்போது அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா 15 மாத கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக குறித்த நபர் கல்முனை மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கு நடை பெற்று வந்த நிலையிலேயே கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
எம்.இளம்செழியன் அடுத்தவாரம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment