May 30, 2015

யாழில் தொடரும் கைது வேட்டை: நேற்று நால்வர்!

அண்மையில் நடந்த மக்கள் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை பொலிசார் கைது செய்து வருகின்றனர். நேற்றையதினமும் இந்த கைது வேட்டை தொடர்ந்தது. நேற்று மட்டும் நால்வர் கைதாகியுள்ளனர்.

வித்தியா கொலையையடுத்து கடந்த 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் பரவலான மக்கள் போராட்டங்கள் நடந்தன. இதன்போது நீதிமன்றம் உள்ளிட்ட பல பொதுச்சொத்துக்கள் தாக்கப்பட்டன. வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டன. இதன்போது வர்த்தகர்களை அச்சுறுத்தியமை, தாக்கியமை, இழுத்து மூடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பலர் குறிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த நால்வர் கைதாகியுள்ளனர்.
வர்த்தகநிலையங்களில் பதிவாகியுள்ள சிசிரிவி கமராக்களில் இளைஞர்களின் முகங்கள் பதிவாகியுள்ளதால், வர்த்தக நிலையங்களிற்கு செல்லும் பொலிசார் சிசிரிவி கமரா காட்சிகளை பெற்று வருகின்றனர். அத்துடன், போராட்டங்கள் நடந்த சமயத்தில் சிவிலுடையில் நின்ற புலனாய்வாளர்களின் கமராக்களிலும் பல இளைஞர்களின் முகங்கள் சிக்கியிருந்தன.
இவை இப்பொழுது ஆராயப்பட்டு கைது வேட்டைகள் நடக்கின்றன.

No comments:

Post a Comment