May 4, 2015

தமிழீழத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு எதிராக போராடுவதே தேசியம் “தற்காப்பு மக்கள் யுத்தம்” முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு!

இலங்கையில் மகிந்த மைத்திரி ரனில் தொடர்பான பரப்புச் செய்திகள் ஒரு புறமும்,  மறு புறமும் வடக்கும் கிழக்கும் திட்டமிட்டு அழிக்கபடுகின்றன. இலங்கையில் தேசிய இன முரண்பாடே பிரதான முரண்பாடாக இன்னும்
தொடர்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்பைக் முறியடிப்பது இலங்கை அதிகாரவர்க்கத்தினதும் அதன் பின்னணியில் செயற்படும் பல்தேசியக் கொள்ளையர்களதும் பிரதான நோக்கமாக உள்ளது. இந்தப் பின்புலத்தில் வடக்குக் கிழக்கு இனப்பரம்பலின் செறிவைக் குறைப்பதற்காக திட்டங்கள் முழு அளவில் செயற்படுத்தப்படுகின்றன.

2009 இல் இறுதி இனஅழிப்பு நடந்து முடிந்து அழிக்கப்பட்டவர்கள் போக மீதிப்பேர் இனஅழிப்பு வதை முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்க யாழ் புகையிரத நிலையத்தில் ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்களை கொண்டுவந்து இறக்கியது இனஅழிப்பு அரசு.
“போரினால் இடம் பெயர்ந்தவர்களாம், அவர்கள் மீள குடியேற வந்திருக்கிறார்களாம்” என்ற வியாக்கியானம் சொல்லப்பட்டது.
சம்பூர் தொடக்கம் வலிகாமம் வரை வருடக்கணக்காக தமிழ் மக்களை மீளக்குடியேற விடாமல் தமிழர் நிலத்தை கபளீகரம் செய்துள்ள இனஅழிப்பு அரசு சிங்களவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிலத்தை தேடியது.
முடிவாக நாவற்குழியில் அவர்களை குடியேற்றியது.

தமிழ் அரசியல்வாதிகளாலோ, மெத்த படித்த தமிழ் மேதவிகளாலோ இது கண்டுகொள்ளப்படவும் இல்லை, இதை தடுக்கவும் முடியவில்லை.

இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மிக மோசமான ஒரு பகுதி என்று உணர்ந்த எம்மைப் போன்ற சிலர் கூட ஒரு 15 அல்லது 20 வருடங்களில் இவர்கள் யாழ்ப்பாணத்தின் நிரந்தர குடிகளாகி மாறி தமிழ் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணித்திருந்தோம்.
ஆனால் எமது கணிப்பை தலைகீழாக்கியிருக்கிறது. அங்கிருந்து வந்த ஒரு செய்தி.

அதாவது தமிழ் நிலத்தை ஆக்கிரமித்த சிங்களவர்களில் ஒரு சிங்களப் பெண்மணி சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.
நான்கு வருடங்களில் நிலத்தை பிடித்து விகாரையை கட்டி, சிங்களப் பாடசாலையை உருவாக்கி நிலத்திற்காள காணி உறுதிகளை பெற்று, வாக்காளர் அட்டையையும் பெற்று தற்போது அவர்களுக்குள்ளிருந்து ஒரு சமாதான நீதவானும் “உருவாக்க”ப்பட்டுள்ளார்.
மிக வேகமான “கட்டமைக்கப்பட்ட” இனஅழிப்புக்கு இதைவிட சிறந்த உதாரணம் உலகில் இருக்க முடியாது.
“எமது நிலத்தை எமக்குத் தா, எமது காணியைத் தா, எமது வீட்டைத்தா” என்று தமிழர்கள் சம்பூர் தொடக்கம் வலிகாமம்ரை வீதியில் நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க சத்தமில்லாமல் நாவற்குழியில் இனஅழிப்பு அரசு இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
தென்தமிழீழம் கிட்டத்தட்ட குடியேற்றங்களால் பறிபோய்விட்டது. வன்னியின் எல்லையோரக் கிராமங்களும் மெதுமெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லையோரங்களை அண்டியுள்ளதால் நம்மால் அதை தடுப்பது கடினம் என்ற ஒரு வாதத்தை தமிழ் அரசியல்வாதிகள் வைக்கலாம். ஆனால் முழுமையான தமிழர் பகுதியில், அதுவும் யாழ் குடா மத்தியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதை எப்படி இவர்களால் தடுக்க முடியாமல் போனது?

வலி வடக்கு, வலி கிழக்கு, தென்மராட்சி, வடமராட்சி என்ற நான்கு வலயங்களாக உள்ள யாழ் குடாவை துண்டாடி புதிதாக ஒரு வலயத்தை உருவாக்கும் திட்டம் இனஅழிப்பு அரசிற்கு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி வருகிறது.
இது நாவற்குழிப்பகுதி மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியோடு வன்னியை இணைக்கும் சில நிலங்களையும் சேர்த்து பிரிக்கப்படும் என்றே நம்பப்படுகிறது.

ஏனென்றால் அங்குதான் அரச காணி என்ற பெயரில் இன்னும் மேலதிக சிங்களவர்களை குடியேற்றக்கூடிய வாய்ப்புள்ள நிலப்பகுதி இருக்கிறது.

நாம் இவர்கள் யாழ் புகையிரத நிலையத்தில் வந்து இறங்கிய போதே இவை அனைத்தும் ஊகித்த விடயம் என்றாலும் இவ்வளவு வேகமாக இவை நடந்தேறும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.

தமிழ் இனப்பரம்பலை தளம்பச் செய்து இனவிகிதாசாரத்தை மாற்றும் திட்டமிட்ட இனஅழிப்பின் அதியுச்ச நிகழ்வு இது.
எல்லைகளை பாதுகாப்பதிலும், இனவிகிதாசாரத்தை பேணுவதிலும் நாம் கோட்டைவிட்டு விட்டு போராடுவதாக, அரசியல் செய்வதாக பிதற்றுவது எமது மக்களையே நாம் ஏமாற்றும் நயவஞ்சக நாடகமாகும்.
எதிர்வரும் காலத்தில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கில் ஒரு வாக்கெடுப்பு நிகழும்போது அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களும் வாக்களிக்கத் தகுதியானவர்களே என சிறீலங்கா அரசு கூறுமானால் வாக்கெடுப்பின் வெற்றி என்பது கேள்விக்குறியானதே.
தமிழ் அரசியல்வாதிகளும் கோட்சூட் போட்டபடி குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்தரங்குகள் என்ற போர்வையில் மக்களுக்கு புரியாத மொழியில் கூட்டம்போட்டு பொழிப்புரை, சிறப்புரை ஆற்றும்; படித்த கனவான்களும் மக்களுக்கு இனியாவது உண்மையை சொல்ல வேண்டும்.
உங்களால் எந்த ஆணியும் புடுங்கேலாது என்பதை பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்து மக்களை போராடச்சொல்லி இனியாவது சொல்ல வேண்டும்.
சொல்வார்களா.?
அல்லது தமது பிழைப்பை பார்த்துக் கொண்டு தமது பதவி கதிரைகளை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து தமது பிழைப்புவாதத்தை தொடரத்தான் போகிறார்களா?

இந்த பத்தியில் இரண்டு நுண்மையான இனஅழிப்பு அம்சம் குறித்து விளக்குகிறேன்.
01. இனஅழிப்பிற்காக களமிறக்கப்படும் யானைகள்.

கடந்த மே மாதம் அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவத்தையும் தென்தமிழீழ எல்லையோர கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தையும் நாம் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் வரையறைக்குள் குறிப்பிட்டதை பலர் வேடிக்கையாக பார்த்தார்கள். எல்லாவற்றிற்கும் சிறீலங்கா அரசை குற்றம் சுமத்தும் போக்கு என்று கண்டித்தும் எழுதினார்கள்.

ஆனால் நாம் தமிழ்அரசியல்வாதிகளுக்கும் சில ஊடக நண்பர்களுக்கும் இது குறித்து விரிவாக விளக்கினோம். அனால் அதை பெரிதாக யாரும் கணக்கெடுக்கவில்லை. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பது வெளியாக தெரியாது. நுட்பமாக அது நடைபெறும். நாம்தான் வேறு பிரித்து அதை அறிந்து மக்கள் அதை எதிர்கொள்ளத் தயார்படுத்த வேண்டும்.

புதிதாக ஒரு மரத்தை புடுங்குவதோ, புதிதாக ஒரு குழிதோண்டுவதோ, ஒருத்தர் நோய்வாய்படுவதோ, ஒரு வீதி விபத்தோ அதை நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதன் இன அழிப்பு பின்புலம் தெரியும். சிறீலங்கா அரசு மிக வேகமாக அதை செய்துவருகிறது.

ஒருத்தர் யானை தாக்கி சாவது எப்படி இன அழிப்பாக இருக்க முடியும்?
விளக்கம் இதுதான். யானைகள் அதிகம் நடமாட்டமில்லாத இடத்தில் எப்படி திடீரென்று யானைகள் வர முடியும்? வேறு ஒரு பகுதியிலிருந்து கொண்டுவந்து விடப்பட்டது என்பதே உண்மை. குறிப்பாக தமிழீழ எல்லையோரக்கிராமங்களில் இது நடக்கிறது. இதன் விளைவாக மக்கள் அங்கிருந்து வெளியேறவோ அல்லது அங்கு தமது விவசாய நிலங்களையோ கைவிட நேரிடும். இதை பயன்படுத்தி அந்த நிலங்களை அரசுக்கு சொந்தமான காட்டு இலாக்காவிற்குள் கொண்டுவரும் முயற்சி இது.

அல்லது யானைகளை விரட்ட – மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல் என்ற பேரில் படைமுகாம்களை நிறுவுவார்கள்.  குறிப்பிட்ட காலத்தில் அது நிரந்தரமாகவே பறிபோகும். சிங்கள குடியேற்றங்களை செய்ய சிங்களம் கையாண்டிருக்கும் புதிய இன அழிப்பு உத்தி இது.

நிலத்தையும் பறிகொடுத்து தமது வாழ்வாதாரங்களையும் இழந்து வெளியேறும் மக்கள் புதிதாக இன்னொரு தமிழர் பகுதிக்குள் குடியேறுவதால் நிகழும் வாழ்வியல் பொருண்மிய மாற்றங்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர்ந்து அந்த சமூகத்தில் பிரதிபலித்துக்கொண்டேயிருக்கும்.

தற்போது வன்னி எல்லையோரக்கிராமங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியும் இந்த இன அழிப்பு உத்திதான்..
எல்லையோர கிராமங்களை நாம் இழப்பது வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயக தேசிய கோட்பாட்டையே சிதைத்துவிடும் பேராபத்து நிறைந்தது.

02. இறப்பர் பயிர்செய்கையும் இனஅழிப்பும்.

வடக்கில் பனை மரங்களுக்கு பதிலாக இறப்பர் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. இதற்கென முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 600 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்யப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நாங்கள் மே 18 அன்றிருந்த மனநிலைக்கு போய்விட்டோம். இன அழிப்பின் அதி உச்ச கட்டம் இது. இன்னும்  10000 சனத்தை கொலை செய்திருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டோம். இது எப்படி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறோம்.

01. பனைக்கு பதிலாக இறப்பர் என்பதே அடிப்படையில் தமிழுக்கு எதிராக சிங்களம் என்பதற்கான குறியீட்டு நிலை அது. பனை என்பது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறதென்பதற்கப்பால் தமிழர்களின் பண்பாட்டு அடையாள வடிவமும் கூட. தமிழர்களின் பாரம்பரியமும் தொன்மமும் தொடர்ந்து பேணப்படும் ஒரு மரபியல் வடிவம் இது. 

தமிழர்களை குறியீட்டுரீதியாக சிதைக்கும் ஒரு இன அழிப்பு வடிவம் என்பதுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நீண்ட கால நோக்கில் வாழ்வியல்ரீதியாக முடக்கும் முயற்சி இது.

02. ஏற்கனவே ஒரு பயிர்ச்செய்கை செய்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலத்தை இறப்பர் பயிரிடுகிறோம் என்ற போர்வையில் நிலப்பறிப்பு செய்து ஆக்கிரமிப்பதுடன் அவர்களது நிலமும் பறிபோய் அவர்களது வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் முயற்சி இது.

03. இறப்பர் பயிர் செய்கை தொடர்பாக தமிழர்களுக்கு போதிய பயிற்சியில்லை. எனவே இதையே ஒரு காரணமாக்கி சிங்களவர்களை புதிதாக தமிழர் நிலத்தில் குடியேற்றும் நுண்ணிய இன அழிப்பு முயற்சி இது.

04. இவை எல்லாவற்றையும் விட தமிழர் வாழ்நிலத்தை – சிறுபயிர் விளை நிலத்தை ( இந்த இரண்டும் இணைந்துதான் தமிழ் விவசாயியின் வாழ்வுள்ளது) இறப்பர் பயிர் செய்கைக்குட்படுத்துவதால் அவர்கள் இடம்பெயரவோ அல்லது புலம் பெயரவோ நேரிடும். இதைத்தான் சிங்களம் எதிர்பார்த்து இதை செய்கிறது.

சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சார்ந்த பகுதி மக்கள் வாழ முடியாத நிலமாக மாற்றுவதற்குப் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனம் செயற்பட்டுள்ளது. மன்னார் கடற்படுக்கையை வேதாந்தா உட்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் சூறையாட ஆரம்பித்துள்ளன. மன்னார் கடலை அண்மித்த பகுதிகள் விரைவில் மற்றொரு சுன்னாகமாக மாற்றமடையும். சம்பூரை மையமாகக் கொண்டு திருகோணமலை அழிக்கப்படுகின்றது.

தமிழீழத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு எதிராகப் போராடுவதே தேசியம் . அதற்கான மக்களின் தற்காப்பு யுத்தமே தேசிய விடுதலைப் போராட்டம்.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.

அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும். இத்தனை தகுதிகளும் அந்த முள்ளிகாய்க்காலுக்கு எப்படி வந்த்து?

நஞ்சுமாலைகள் களத்திலே வீழ்ந்த்தாம் 
அஞ்சிடாதார் உடல்கள் அழிந்து போனதாம் 
குஞ்சு குருமன்களும் குண்டுபட்டுச் சிதைந்து போனதாம். 
ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பின் போர்க்களத்தில் தமிழினம் ஆடிய வெஞ்சமரது. அந்த முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் கொடுமையை அப்பெருந்துன்பத்தை எப்படிச் சுமப்போம்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர். நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.

உலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா? மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே!! உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்துக் கிழட்டு நரி போர்நிறுத்தம் வந்துவிட்டது என்று உலகத்தமிழர்களை சமாதானப்படுத்த உண்ணாவிரத நாடகம் வேறு ஆடினார். அப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து? கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா? மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.

காருணிய வள்ளல் புத்தனின் சீடன் மகிந்த்தேர்ர் ஈழம் வந்தான் அறத்தைப்போதிக்க. ஆனால் அவன் வழிவந்த பூட்டப்பிள்ளை ஈழம் வந்தான் கொலைத்தொழில் கற்பிக்க. இருவரிலும் ஒரு ஒற்றுமை கண்டோம் இருவரது பயணமும் பௌத்த்த்தின் பெயரால் நிகழ்ந்த்தாம். ஈழமண் பல பௌத்த வெறியர்களை கண்டிருக்கிறது. 

முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.

நாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா?

தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக may 16, 17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா? 
அந்தக் கொலைகாரக் ஹிட்லர் கூட கொன்றதன் பின்தான் யூதர்களைப் புதைத்தான் எரித்தான். ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்களமோ உயிருடனல்லவா எம்மினத்தைப் புதைத்த்து.

ஒன்றா இரண்டா மூன்று நாளில் 46.000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.

உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீர்ர்களையும் பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.

01. சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்
02. தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்
03. தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த     
வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்

இதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது. 
எனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம்.

உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா? 
சிங்களதேசற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா உலகத்தமிழினமே விழித்திரு வெறித்திரு தெளிந்திரு நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.
- ஈழத்து நிலவன் -

No comments:

Post a Comment