May 4, 2015

ஐ.நா மனித உரிமை அறிக்கையில் 40 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையில், 40 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே, 40 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்களின், முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி, சிறிலங்கா படையினருக்குத் தலைமை தாங்கிய மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் உயர் மட்டப் பாதுகாப்பு அதிகாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியங்களை அளித்தவர்கள் பற்றிய விபரங்கள், 2031ம் ஆண்டு வரை இரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment