விடுதலைப் புலிகளின் முன் நாள் ஆயுத தரகரான குமரன் பத்மநாதன் (KP) மீது கண்காணிப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் குமரன் பத்மநாதன் (KP) இலங்கை அரசிடம் சரணடைந்தார்.
அன்று முதல் இன்றுவரை அவர் ராஜபோக வாழ்கை வாழ்ந்து வருகிறார். கோட்டபாயவின் தனிப்பட்ட கவனிப்பில் அவருக்கு 15 க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காவலாளிகளாக உள்ளார்கள்.
ஒரு சிகரெட் வேண்டும் என்றால் கூட ராணுவத்தினரே ஓடிச்சென்று வாங்கி வந்துகொடுக்கும் அளவுக்கு அவருக்கு அங்கே செல்வாக்கு இருந்துவந்தது. ஆனால் தற்போது நிலமை சற்று மாறிவிட்டதாக அறியப்படுகிறது.
கிளிநொச்சி ராணுவத் தளபதியை , அல்லது மூத்த அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி யாருக்கும் குமரன் பத்மநாதன் (KP) பேட்டி கொடுக்க முடியாது என்ற கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் தொலைபேசி ஒட்டுக்கேட்க்கப்படுவதோடு அவர் செல்லும் இடங்கள் அனைத்தையும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவர் முன்னர்போல சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தோன்றியுள்ளது.
குறித்த இந்த இறுக்கமான நடவடிக்கை கடந்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது என மேலும் அறியப்படுகிறது.
No comments:
Post a Comment