பொலிஸார் தொடர்பாக செய்தி வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.ஊடகவியலாளர் ஒருவர் குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
மாணவி ஒருவரை காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பிலேலேய குறித்த ஊடகவியலாளரை காவற்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் மாணவி தொடர்பாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் அது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
எனினும், அச்செய்தியானது உண்மையானது, என குறித்த பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட முடியாத நிலைமை தொடர்வதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment