April 9, 2015

சுன்னாகம் குடிநீர் போராட்டம் ஏன் முடித்து வைக்கப்பட்டது? அம்பலமாகியது சங்கதி!

சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான போராட்டம் சர்ச்சைக்குரிய வகையினில் முடிவுறுத்தப்பட்டமை பல்வேறு தரப்புக்களிடையேயும் சந்தேகங்களினை தோற்றுவித்தேயுள்ளது.

கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக்கொண்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் 72மணித்தியாலத்தினுள் தீர்வெனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் வெறும் 30மணித்தியாலத்துடன் அதனை முடித்துக்கொண்டனர்.அதன் போது மயக்கமுற்று சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மக்கள் முழு அளவினில் நம்பி ஆதரவு தெரிவித்து இணைந்து போராடியபோதும் அம்மக்களது காதில் பூவைப்பது போன்று ஈபிடிபி பிரமுகர்களான சுந்தரம் டிவகலாலா மற்றும் சிவச்சந்திரனது ஏற்பாட்டினில் இலங்கை அரசின் ஆளுநரது உறுதி மொழியுடன் உண்ணாவிரதத்தினை முடித்துக்கொண்டனர்.
எனினும் தமக்கான சுயவிளம்பரத்திற்காகவே சிலர் போராட்டத்தினில் இணைந்துகொண்டமை அம்பலமாகியுள்ளது.போராட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு அவர்கள் நேற்றிரவு 46 வயதான அம்மணியொருவரது பிறந்த தினத்தினில் கலந்து கொண்டமை அம்பலமாகியுள்ளது.
மக்களது நம்பிக்கைகளினை சிதறடித்து அவர்கள் நேற்று கொண்டாடிய நிகழ்வு மற்றும் போராட்டகள புகைப்படங்கள் சமூக ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 




No comments:

Post a Comment