சிறிலங்கன் விமான சேவையில் காணப்படும் விமானங்கள் அனைத்தும் மிகவும் பழைமையானவை என்று உறுதியாகி இருக்கிறது.சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான வெலியமுன வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதில் அநாவசியமான முறையில் 2.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான விமானங்களை அமெரிக்காவில் இருந்து முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க இறக்குமதி செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்து.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ள முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க, சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உள்ள அனைத்து விமானங்களும் 12 தொடக்கம் 18 வருடங்கள் பழைமையானவை என்று கூறியுள்ளார்.
இதனாலேயே புதிய விமானங்களை கொள்வனவு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாகவே சிறிலங்கன் விமான சேவையின் விமானங்கள் பழைமையானவை என்றும், இதனால் அந்த நிறுவனத்தின் பல விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த போது சிறிலங்காவின் முன்னாள் அரசர்கம் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment