April 11, 2015

வட்டிக்கு கடன் வாங்கும் குட்டித் தொழிலதிபர்கள் குறித்து எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் குட்டித் தொழிலதிபர்கள் என்று கிளம்பி உள்ள பலரும் பல இலட்சம் ரூபாய் பணத்தை தனிப்பட்ட நபர்களிடம் இருந்து வட்டிக்கு கடனாக பெற்றுக் கொண்டு டிமிக்கி விடுகின்றார்கள்.

இனிப்பாக பேசி பணத்தை கறப்பதில் இவர்கள் கில்லாடிகள். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் இவர்களின் சத்தத்தையே கேட்க முடியாமல் உள்ளது.


முதலில் பணக்கார அப்பாவிகளை அடையாளம் கண்டு நட்பு உருவாக்குவார்கள். வட்டிக்கு கடன் தாருங்கள், வங்கி வட்டியை விட அதிக வட்டி மாதாந்தம் தவறாமல் தரப்படும், இது ஒரு நல்ல முதலீடு என்று குழைவாக சொல்லி சம்மதிக்க வைப்பார்கள்.
ஆனால் பணத்தை கொடுத்த பிற்பாடு வட்டிக்கு மட்டும் அல்ல முதலுக்கே மோசம் வந்து விடும். இவ்வாறானவர்களுக்கு பணம் கொடுத்த பலரும் வட்டி வேண்டாம், முதலையாவது தாருங்கள் என்று கெஞ்சி மண்டாடி செருப்புத் தேய அலைகின்றனர்.

கட்டிட நிர்மாண வேலைகளை தனிப்பட்ட நபர்கள், கோவில்கள் ஆகியவற்றுக்கு செய்து கொடுக்கின்ற ஒப்பந்தக்கார நபர் ஒருவர் குறித்து இவ்வாறு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவருடைய தகப்பனும் கட்டிட நிர்மாண வேலைகளை ஒப்பந்தத்துக்கு செய்பவர். இவருடைய தங்கையின் கணவர் கல்வியங்காட்டில் பெற்றோல் செட் வைத்து நடத்துகின்றார்.  ஊரில் சொந்தமாக கோவில் உள்ளது.

இவரிடமும், இவரைப் போன்றவர்களிடமும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டு இருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சட்டத்துக்கு அமைய முறைப்பாடு செய்ய முடியும்.
அத்துடன் எமது செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கின்ற பட்சத்தில் இவ்வாறானவர்களின் முகத் திரையை நாம் நேரடியாக கிழிப்பதோடு உங்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.

No comments:

Post a Comment