April 13, 2015

கிளிநொச்சிப் பகுதி கிணற்றில் இருந்து உயிரிழந்த பெண் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று காலை பாவனையற்ற கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்த பெண் பெரிய குளம், புளியம் பொக்கனை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சிவரூபினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலசுப்பிரமணியம், சடலத்தினை உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதன் பின்னர் சடலம் மேலே எடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment