April 13, 2015

யாழ் விடுதிகளில் காமநோக்குடன் எங்களை அணுகுகின்றனர் - வெளிநாட்டு பெண் உல்லாசப் பயணிகள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல்கள், விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடன்  பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடமுற்படுவதாக வெளிநாடுகளில் இருந்து வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

விடுதிகளில் வேலை செய்பவர்கள் தமது அறைகளுக்குள் அத்துமீறிப் புகுந்து ”நாங்கள் உதவி பண்ணவா?” எனவும் தகாத முறையிலும் தங்களுடன் நடக்க முற்படுகின்றனர்.
அத்துடன் தங்கியிருக்கும் ஹோட்டல், விடுதி அறைகளை விட்டு வெளியே வந்து புடவைக் கடை மற்றும் பொருட்களை வாங்கும் இடங்களுக்கு செல்லும் போது அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தமது கைகளைப் பிடித்து இழுத்து ’வாங்கோ உள்ளே உள்ள அறைக்கு செல்வோம்’ என கூறி அநாகரீகமாக நடப்பதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ் மாவட்ட வணிகர் கழகம் மற்றும் உல்லாசப் பிரயாணிகள் தொடர்பான தரப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment