April 16, 2015

விடுவிக்கப்பட்ட காணிகளில் விரைவில் குடியேறுமாறு வலியுறுத்தல்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் பொது மக்கள் உடனடியாக குடியேற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


விடுவிக்கப்பட்ட காணிகளில் உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள், பல காணிகள் விடுவிக்கப்படாமை, மற்றும் இராணுவ முகாம்கள் அருகில் இருப்பதால் காணப்படும் அச்சம் போன்றவற்றால், காணி உரிமையாளர்கள் பதிவுகளை மேற்கொள்வதிலும் குடியேறுவதிலும் தயக்கம் காட்டுகின்றனர்.

எனினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள கட்டிடங்கள் சில உடைக்கப்பட்டு அதன் எஞ்சியுள்ள கட்டுமான பொருட்கள் திருதப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இது குறித்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமையை தடுப்பதற்காக தங்களின் காணிகளை சுத்தம் செய்து, குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment