கூட்டமைப்பினை பதிவு செய்வதில்லையென தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை மீண்டும் ஒன்று கூடி முடிவு செய்துள்ளது.இன்று யாழ்.நகரின் மார்டின் வீதி தலைமையத்தினில் நடைபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் தமிழரசுக்கட்சியின் பதிவின் கீழேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை வட்டார முறைமைகளின் கீழ் எதிர்கொள்வது மற்றும் ஆந்திராவினில் தமிழர்கள் மீதான படுகொலை,நாகதீபமென அடையாளப்படுத்தப்படும் நயினாதீவை சொந்த பெயரினில் நிலைநிறுத்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆட்;களை முன்னிறுத்தல் போன்றவை பற்றி ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment