வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலக திறப்பு விழா நாளை மாலை நான்கு மணிக்கு வவுனியா குருமன்காட்டில் நடைபெறவுள்ளதாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கோபாலாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் பொதுச்செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதமவிருந்தினராகவும் அகில தமிழ் காங்கிரசின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ,சட்டத்தரணியும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான வி.மணிவண்ணன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா.இராசையா,மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இ.ஹரிகரன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் வி.இந்திராதேவி,மன்னார் மாவட்ட அமைப்பாளர் பெனடிக்ற் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் அ.யோகேஸ்வரன் கட்சியின் பிரசார செயலாளர் சி.இளங்கோ ஆகியோர் கௌரவவிருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment