இந்தியாவிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்தமையால் தான் தமிழர்களை இந்திய வெறுக்க ஆரம்பித்தது என வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
புலிகள் தேர்தல் முறைகளில் அறிவற்றவர்களாக இருந்தமையால் தான் வட-கிழக்கு மாகாணசபை தேர்தலில் புலிகள் தரப்பில் வெற்றியை பெற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஜனாயக வழியில் தான் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனதாகவும் அவர் தன்னை நியாயப்படுத்தியுள்ளார்.
வரதராஜப்பெருமாளின் அனுவப பகிர்வு எனும் தொனிப்பொருளில் யாழ்.வைமன் வீதியில் அமைந்துள்ள ஆறுதல் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மாகாண சபை என்ற முறைமையை இந்தியா தான் அன்று கொண்டுவந்திருந்தது.
இதனை புலிகள் அன்று எதிர்த்திருந்தனர் எனினும் இந்தியாவின் முயற்சியின் பயனாக அம்மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டு பின்னர் புலிகளின் விருப்பப்படி அந்த மாகாண சபையும் கலைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புலிகள் அரசியலில் தெளிவற்ற ஒரு நிலையை கொண்டிருந்தனர்.
தங்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்பதற்காக புலிகள் என்னை சுட முயற்சித்திருந்தனர். இதன் போது தான் எமக்கு இந்தியாவின் அமைதி காக்கும் படை பாதுகாப்பளித்திருந்தது. இலங்கை படைகள் எமக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் இந்திய படைகள் எமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
நான் இந்திய அமைதி காக்கும் படையினரால் தான் முதலமைச்சர் பதவியை பெற்றேன். தேர்தலில் பல தில்லுமுல்லுகளை மேற்கொண்டேன். தமிழ் இனத்துரோகி என இப்போது என்னை அடையாளப்படுத்துகின்றனர். இது வருத்தத்திற்கு உரியதாகும். கடந்த கால வரலாறுகளை எழுதியவர்கள் ஆதனை திரிபு படுத்தியமையால் தான் இந்த நிலைமை.
கடந்த கால வரலாறுகளை எழுதியவர்களில் விடுதலைப்புலிகளின் பாலசிங்கமும் ஒருவர் அவர் புலிகளுக்கு சாதகமாகவே கருத்துக்களை பதிந்துள்ளார். என தெரிவித்தார் இதன் போது வடக்கு கிழக்கில் முதலாவதாக தேசிய கொடியை ஏற்றிய தமிழ் இனத்துரோகி தான் தான் என்பதனையும் தடுமாறி ஒப்புக்கொண்டார்.
No comments:
Post a Comment